இந்திய அணியின் வீராங்கனையான ஷபாலி வர்மா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
மகளிருக்கான ஆசிய கோப்பை இறுதிப்போட்டி இன்று நடந்து வருகிறது. இதில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.
டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்து ஆடி வருகிறது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்திருந்தபோது ஷபாலி வர்மா 48 ரன்னில் ஆட்டம் இழந்தார். 28 பந்தில் 3 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 48 ரன்கள் குவித்த ஷபாலி வர்மா நடப்பு ஆண்டில் 863 ரன்கள் குவித்துள்ளார்.
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனையாக ஷபாலி வர்மா சாதனை படைத்துள்ளார்.