கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்கா உடனான டெஸ்ட் தொடர்: காயத்தால் விலகிய ஷட்மன் இஸ்லாம்

வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது.

வங்கதேச தொடக்க வீரரான ஷட்மன் இஸ்லாம் கணுக்கால் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி சிலெட்டில் நடந்து வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது ஷட்மன் இஸ்லாமுக்கு காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், வரவுள்ள தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து தொடக்க வீரர் ஷட்மன் இஸ்லாம் கணுக்கால் காயத்தால் விலகி உள்ளார்.

காயம் ஏற்பட்டதை அடுத்து ஷட்மன் இஸ்லாம் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஷட்மன் இஸ்லாம்

முழுமையான மருத்துவ அறிக்கை கிடைத்தபின் காயத்தின் தீவிரம் மற்றும் குணமடையும் காலம் உறுதியாகத் தெரியவரும்.

ஷட்மான் இஸ்லாமுக்கு பதிலாக மக்பிசுல் இஸ்லாம் ராபினைத் தேர்வு செய்ய வங்கதேச அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.

வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது.

SCROLL FOR NEXT