தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி
கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: முதல்நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 187/6

ஸ்மித் 25 ரன்களிலும், லபுஸ்சேன் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலியா அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டர்பனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

மேடின்சன் டக்அவுட்

நிக் மேடின்சன், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மேடின்சன் 33 பந்துகளை சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். டிராவிஸ் ஹெட் 9 ரன்களில் ஏமாற்றம் அடைந்தார்.

3-வது விக்கெட்டுக்கு லபுஸ்சேன் உடன் ஸ்டீவன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. இருந்தாலும் ஸ்மித் 25 ரன்களிலும், லபுஸ்சேன் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து ரென்ஷா களம் இறங்கினர். இவர் ஒருபக்கம் நிலைத்து நிற்க மறுமுனையில் அலேக்ஸ் ஹேரி 14 ரன்களிலும், வெப்ஸ்டர் 4 ரன்களிலும் ஆட்டமிந்தனர்.

65.2 ஓவருடன் முதல்நாள் ஆட்டம் நிறைவு

இதனால் ஆஸ்திரேலியா 124 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. 7-வது விக்கெட்டுக்கு ரென்ஷா உடன் பேட் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. ஆஸ்திரேலியா 65.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்திருக்கும்போது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அத்துடன் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ரென்ஷா 46 ரன்களுடனும், பேட் கம்மின்ஸ் 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மார்கோ யான்சன், வியான் முல்டர், அன்ரிச் நோர்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

SCROLL FOR NEXT