சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடரில் கேரளா அணி கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடர் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான கேரளா அணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கேரளா அணியின் கேப்டனாக இந்திய அணியின் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளா அணியில் சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரோகன் குன்னுமல், முகமது அசாருதீன், விஷ்ணு வினோத், சல்மான் நிசார், அஹமது இம்ரான், கோவிந்த் தேவ் பாய் உள்ளிட்ட வீரர்கள் இடம்பிடித்தனர்.
ஐபிஎல் தொடரில் விளையாடிய விக்னேஷ் புத்தூர், கே.எம்.ஆசிப் ஆகியோரும், அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஜலஜ் சக்சேனாவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சையத் முஷ்டாக் அலி தொடரில் கேரளா அணி தனது முதல் போட்டியில் நவம்பர் 14-ம் தேதி மத்திய பிரதேசம் அணியை எதிர்கொள்கிறது.