கிரிக்கெட்

Sanju Samson | சுயநலமாக இருக்க வேண்டியிருந்தது... சதமடிக்கும் வாய்ப்பை பயன்படுத்தாதது பற்றி சஞ்சு சாம்சன்

களத்திற்கு வெளியேயும் நான் அமைதியாக தான் இருப்பேன்.

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 156 ரன்களை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

இந்தப் போட்டியில் சென்னை வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் இவர் சதம் அடிக்கும் வாய்ப்பு உருவான போதிலும், மறுமுனையில் கார்த்திக் ஷர்மா அதிரடியாக ஆடி ரன் குவிக்க சஞ்சு சாம்சன் சதம் அடிக்க முடியாமல் போனது. இது குறித்த கேள்விக்கு போட்டி முடிந்த பிறகு சஞ்சு சாம்சன் பதிலளித்தார்.

இது குறித்து பேசிய அவர், "அவர்கள் என்னை சேட்டா என்று அழைக்கிறார்கள், ஆனால் எனக்கு சஞ்சு என்று அழைப்பதே அதிகம் பிடிக்கும். எனது ஆரம்பகட்ட அசைவில் கொஞ்சம் பயிற்சி செய்து வருகிறேன், அது இப்போது கைகூடுகிறது. கடந்த சில ஆண்டுகளாக நான் இதை செய்து வருகிறேன், இது பந்துவீச்சாளர்களை பொறுத்தும், அவர்களை எப்படி அணுக வேண்டும் என்பதை பொறுத்தும் ஒரு தந்திரமும் கூட.

உண்மையை சொல்லப்போனால், நான் எப்போதும் இப்படித்தான் (அமைதியாக) இருப்பேன், ஆனால் இப்போது நீங்கள் என்னை களத்தில் அதிகமாக பார்ப்பதால், நான் அமைதியாக இருப்பதை உணர்கிறீர்கள், களத்திற்கு வெளியேயும் நான் அமைதியாகத்தான் இருப்பேன்.

நாங்கள் துரத்திய இலக்கையும், விக்கெட்டின் தன்மையையும் பார்க்கும்போது, ​​பவர்பிளேயில் விக்கெட் இழப்பின்றி 35 ரன்கள் எடுத்திருந்தாலும், மிடில் ஓவர்களில் எங்களால் அதை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடிந்திருக்கும். சதம் அடிப்பதற்காக நான் கொஞ்சம் சுயநலமாக இருக்க வேண்டியிருந்தது, அதனால் போட்டியில் வெல்வோம் என்று நினைத்தேன். ஆட்டமிழக்காமல் முடிப்பது, போட்டியில் வெற்றி பெறுவது அதிக திருப்தியைத் தரும்," என்று தெரிவித்தார்.