கிரிக்கெட்

Sanju Samson | எம்.எஸ். தோனி சாதனையை முறியடித்தார் சஞ்சு சாம்சன்

முதலில் பேட் செய்த சி.எஸ்.கே. அணி, அதிரடியாகத் தொடங்கியது.

ஐ.பி.எல். 2026 தொடரில், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக சஞ்சு சாம்சன் ஒரு சிறந்த வரவாக அமைந்துள்ளார். அவர் ஏற்கனவே ஐ.பி.எல். 2026 தொடரில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்துள்ளார்.

இந்த வரிசையில் நேற்றிரவு (மே 18) நடந்த போட்டியின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் விக்கெட் கீப்பராக நியமிக்கப்பட்ட வீரர் ஒரு சீசனில் எடுத்த அதிக ரன்கள் என்ற எம்.எஸ். தோனியின் சாதனையை சஞ்சு சாம்சன் முறியடித்தார்.

எம்.எஸ். தோனி 2013-இல் 16 இன்னிங்ஸ்-இல் 461 ரன்கள் எடுத்திருந்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 27 ரன்கள் எடுத்த சாம்சன் நடப்பு ஐ.பி.எல். தொடரின் 13 போட்டிகளின் முடிவில் இதுவரை 477 ரன்களை 477அடித்துள்ளார்.

சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2026 தொடரின் 63வது போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இந்த ஆட்டத்தில் டிவால்ட் பிரெவிஸ் 44 ரன்கள் என்ற முக்கியமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

முதலில் பேட் செய்த சி.எஸ்.கே. அணி, அதிரடியாகத் தொடங்கியது. விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடினார். சென்னை அணி பேட்டிங்கில் நல்ல ஸ்கோரை பதிவு செய்த போதிலும், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் சொதப்பியதை அடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.