10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், பயிற்சியை தொடங்கிவிட்டனர்.
எந்தவொரு விளையாட்டு அணியாக இருந்தாலும், வெற்றி பெறும் வரை அதற்கு உரிய அளவிலான மரியாதை கிடைப்பதில்லை என லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எந்தவொரு விளையாட்டு அணியாக இருந்தாலும், வெற்றி பெறும் வரை அதற்கு உரிய அளவிலான மரியாதை கிடைப்பதில்லை. ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் அன்பு வெற்றியைப் பொறுத்தே அமைகிறது. நாங்கள் இரண்டு முறை 'பிளே-ஆஃப்' சுற்றுக்கு முன்னேறியுள்ளோம்.
ஆனால், அது மட்டும் போதுமானதல்ல என்பது தெளிவாகிறது. சில போட்டிகளில் வெற்றி பெறலாம், சிலவற்றில் தோல்வியடையலாம். கடந்த கால சாதனைகளைத் தாண்டி முதல் ஐபிஎல் கோப்பையை வெல்வதே தற்போதைய பிரதான இலக்கு.
என அவர் கூறினார்.