கிரிக்கெட்

53வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய சச்சின்

கிரிக்கெட்டின் கடவுள் என சச்சின் அவரது ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் சச்சின் தெண்டுல்கர். டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக போற்றப்படும் சச்சின், அவரது ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சர்வதேச போட்டிகளில் 100 சதங்கள் விளாசியுள்ள சச்சின் தெண்டுல்கர், டெஸ்ட் போட்டியில் 15,921 ரன்களும், ஒருநாள் போட்டியில் 18,426 ரன்களும் குவித்துள்ளார்.

சச்சின் தெண்டுல்கருக்கு இன்று 52 வயது முடிவடைந்து, 53-வது வயதிற்குள் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு வீட்டின் முன் கூடியிருந்த ரசிகர்கள் முன்னிலையில் சச்சின் டெண்டுல்கர், மனைவி அஞ்சலியுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார்.