இலங்கையில் ஜூன் 9-ந்தேதி தொடங்கும் 'ஏ' அணிகளுக்கான முத்தரப்பு தொடருக்கான இந்தியா 'ஏ' அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. திலக் வர்மா தலைமையிலான இந்தியா 'ஏ' அணியில் ரியான் பராக் இடம் பிடித்திருந்தார். தற்போது காயம் காரணமாக அவரை அணியில் இருந்து பிசிசிஐ தேர்வுக்கு குழு நீக்கியுள்ளது. அவருக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தொடைப் பகுதியில் ஏற்பட்டுள்ள தசைபிடிப்பு காரணமாக அவர் Rehabilitation காலம் உள்பட 3 மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
முத்தரப்பு தொடரில் இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் விளயைாடுகின்றன.