கேப்டன் ரோகித் சர்மா 
கிரிக்கெட்

இந்திய அணி முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு திரும்புவதாக தகவல்

ஜனவரி 03 முதல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்தியா பங்கேற்கும்.

இந்திய அணியின் மூத்த வீரர் ரோகித் சர்மா, அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடியும் வரை இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடுவதில் உறுதியாக உள்ளார்.

அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை குறித்த யூகங்கள் நிறைந்த ஓர் ஆண்டிற்கு பிறகு, 50 ஓவர் வடிவத்தில் அணியின் திட்டங்களில் ரோகித் இறுதியாக தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றது, அவருக்கு தொடர்ச்சியான போட்டி பயிற்சியை இழக்க செய்கிறது.

உள்ளூர் கிரிக்கெட்:

இந்த பிரச்சினையை தீர்க்க, விஜய் ஹசாரே கோப்பையில் மும்பை அணிக்காக விளையாட ரோகித் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அறிக்கையின்படி , உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பது குறித்து ரோகித் மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் (MCA) தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் எத்தனை போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளார் என்ற சரியான எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

மும்பை அணியில் ரோகித் சர்மா:

விஜய் ஹசாரே கோப்பையில் மும்பை அணிக்காக விளையாட இருப்பதாகவும், சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிரான இந்தியாவின் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு பிறகு அவர் விளையாட தயாராக இருப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் எத்தனை போட்டிகளில் விளையாட தயாராக இருப்பார் என்பதை பின்னர் தெரிவிப்பார்," என எம்.சி.ஏ. வட்டாரம் ஒன்று கூறியதாக அந்தப் பத்திரிகை மேற்கோள் காட்டியுள்ளது.

விஜய் ஹசாரே கோப்பை டிசம்பர் 14 அன்று தொடங்குகிறது, அதன் இறுதி போட்டி ஜனவரி 08 அன்று நடைபெற உள்ளது. மேலும், டிசம்பர் 13 முதல் 19 வரை சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெறும் இந்திய அணியின் ஒருநாள் தொடரிலும் ரோகிித் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, ஜனவரி 03 முதல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்தியா பங்கேற்கும்.

SCROLL FOR NEXT