ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா ஒரு இடம் சரிந்து 5வது இடம் பிடித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ரோகித் சர்மா சரிவைச் சந்தித்துள்ளார்.
சமீபத்தில் நியூசிலாந்தில் பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என வென்று அசத்தியது.
இந்தத் தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி தொடர் நாயகன் விருது வென்றார். விராட் கோலியைத் தவிர இந்திய வீரர்கள் ஒருவரும் அரைசதம்கூட அடிக்கவில்லை.
இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 806 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.
நியூசிலாந்தின் டேரில் முட்செல் 778 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.
இந்தியாவின் விராட் கோலி 757 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார்.
ஆப்கானிஸ்தானின் இப்ராகிம் ஜட்ரன் ஒரு இடம் முன்னேறி 752 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார்.
இந்தியாவின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, 4-வது இடத்திலிருந்து ஒரு இடம் சரிந்து 5-வது இடம் பிடித்துள்ளார்.