கிரிக்கெட்

ஒருநாள் போட்டி அணியில் இனி இடம்பெறமாட்டார்- சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் ரோகித் சர்மா

மற்றொரு சீனியர் வீரரான விராட் கோலி தொடர்ந்து நல்ல நிலையில் இருப்பதால் உலக கோப்பை வரை விளையாடுவார் என்று கருதப்படுகிறது.

இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரோகித் சர்மா. இந்தியாவுக்கு 2 ஐ.சி.சி. கோப்பையை வென்று கொடுத்த அவர் டெஸ்ட் மற்றும் 20 ஓவர் ஆட்டங்களில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். ஒருநாள் போட்டியில் மட்டும் ஆடி வருகிறார்.

ரோகித் சர்மா

இந்த நிலையில் ஒருநாள் போட்டியிலும் ரோகித் சர்மாவின் எதிர்காலம் முடிவுக்கு வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 போட்டியிலும் அவரது ஆட்டம் ஏமாற்றம் அளித்தது. முதல் ஆட்டத்தில் 11 ரன்னும், நேற்று நடந்த 2- வது போட்டியில் 26 ரன்னும் எடுத்தார்.

2027 உலக கோப்பைக்கான அணியை உருவாக்கும் வகையில் இனிவரும் போட்டிகளில் ரோகித் சர்மாவுக்கு இடம் கிடைக்காது. இதை அவரிடம் தேர்வு குழு தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரோகித் சர்மா இடத்தில் ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்படுவார். அவர் நீண்ட காலமாக காத்திருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான 3- வது ஒருநாள் போட்டி ரோகித் சர்மாவின் கடைசி சர்வதேச ஆட்டமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் அவர் ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

39 வயதான ரோகித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. அவர் 287 ஒருநாள் போட்டியில் விளையாடி 11,757 ரன் எடுத்துள்ளார். சராசரி 48.58 ஆகும். 33 சதமும், 62 அரை சதமும் பதிவு செய்துள்ளார். அதிகபட்சமாக 264 ரன் குவித்துள்ளார்.

விராட் கோலி

மற்றொரு சீனியர் வீரரான விராட் கோலி தொடர்ந்து நல்ல நிலையில் இருப்பதால் உலக கோப்பை வரை விளையாடுவார் என்று கருதப்படுகிறது.