கிரிக்கெட்

டிராவிட், கவாஸ்கர் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா

ராகுல் டிராவிட் டெஸ்டில் 36 சதமும், ஒரு நாள் போட்டியில் 12 செஞ்சூரியும் (மொத்தம் 48) அடித்துள்ளார்.ரோகித் சர்மா டெஸ்டில் 12 சதமும், ஒரு நாள் போட்டியில் 31 மற்றும் 20 ஓவரில் 5 சதமும் அடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அவர் 162 பந்துகளில் 13 பவுண்டரி, 3 சிக்சருடன் 103 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் அவர் 2-வது சதம் அடித்துள்ளார். ராஜ்கோட்டில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் 131 ரன் எடுத்து இருந்தார்.

59-வது டெஸ்டில் விளையாடி வரும் ரோகித் சர்மா நேற்று தனது 12-வது சதத்தை பதிவு செய்தார். ஒட்டு மொத்த சர்வதேச போட்டிகளில் 48-வது செஞ்சூரியை அடித்தார். இதன் மூலம் அவர் முன்னாள் கேப்டனும், தற்போதைய பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டை சமன் செய்தார்.

36 வயதான ரோகித் சர்மா டெஸ்டில் 12 சதமும், ஒரு நாள் போட்டியில் 31 மற்றும் 20 ஓவரில் 5 என ஆக மொத்தம் 48 சதங்களை பதிவு செய்துள்ளார்.

ராகுல் டிராவிட் டெஸ்டில் 36 சதமும், ஒரு நாள் போட்டியில் 12 செஞ்சூரியும் (மொத்தம் 48) அடித்துள்ளார்.

இருவரும் தற்போது 10-வது இடங்களில் உள்ளனர். தெண்டுல்கர் 100 சதத்துடன் முதல் இடத்திலும், விராட் கோலி 80 செஞ்சூரியுடன் 2-வது இடத்திலும், ரிக்கி பாண்டிங் 71 சதத்துடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 4-வது சதத்தை (14 போட்டி) ரோகித் சர்மா எடுத்தார். இதன் மூலம் அவர் கவாஸ்கர் சாதனையை சமன் செய்தார். கவாஸ்கர் 38 டெஸ்டில் 4 சதம் எடுத்து இருந்தார்.

இங்கிலாந்துக்கு எதிராக ராகுல் டிராவிட், தெண்டுல்கர் தலா 7 செஞ்சூரியும், அசாருதீன் 6 சதமும், வெங்சர்க்கார், விராட் கோலி தலா 5 செஞ்சூரியும் அடித்துள்ளனர்.