ராபின் உத்தப்பா
கிரிக்கெட்

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் கோச் ஆனார் ராபின் உத்தப்பா

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பொல்லார்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான ராபின் உத்தப்பா, மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் முக்கியமான பிரான்சைஸ் அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஜெயவர்தனே, அப்பதவியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த பொல்லார்டு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் பேட்டிங், பவுலிங் கோச்சர்கள் உள்பட சப்போர்ட் ஸ்டாஃப்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ராபின் உத்தப்பா பேட்டிங் கோச்சாக நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்தை சேர்ந்த மிட்செல் மெக்கிளேனகன் பவுலிங் கோச்சாக நியமிக்கப்பட்டுள்ளார். டி. திலிப் பீல்டிங் கோச்சாக நியமிக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் தவால் குல்கர்னி டெவலப்மென்ட் பவுலிங் கோச்சாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் பொல்லார்டின் கீழ் பணியாற்றுவார்கள்.

ராபின் உத்தப்பா

ராபின் உத்தப்பா மற்றும் மெக்கிளேனகன் ஆகியோர் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளனர். ராபின் உத்தப்பா 2008-ல் விளையாடினார். மெக்கிளேனகன் 2015 முதல் 2019 வரை 5 சீசன்களில் விளையாடியுள்ளார். இவர் 56 போட்டிகளில் 71 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சாம்பியன் பட்டம் வென்ற 2015 மற்றும் 2019 அணிகளில் இடம் பிடித்திருந்தார்.

ராபின் உத்தப்பா 14 போட்டிகளில் 320 ரன்கள் அடித்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.

தவால் குல்கர்னி, டி.திலிப்

தவால் குல்கர்னி 2008 முதல் 2013 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். அதன்பின் 2020 முதல் 2021 வரை விளையாடியுள்ளார். டி. திலிப் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆவார். இவர் 2021 முதல் 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபி வரையிலும், அதன்பின் 2025-ம் ஆண்டும் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

SCROLL FOR NEXT