கிரிக்கெட்

பார்ட்னர்ஷிப்பில் 8,000 ரன்களைக் கடந்த ரோகித் சர்மா-விராட் கோலி ஜோடி

இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 26 ரன்னில் அவுட் ஆனார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி கார்டிப்பில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், கேப்டன் சுப்மன் கில் இறங்கினர்.

முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 31 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். விராட் கோலி தொடக்கம் முதலே ரன் குவிப்பில் ஈடுபட்டார். ரோகித் சர்மா 26 ரன்னில் வெளியேறினார்.

இந்நிலையில், ரோகித் சர்மா-விராட் கோலி ஜோடி பார்ட்னர்ஷிப்பில் 8000 ரன்களைக் கடந்துள்ளது.

இந்த ஆட்டத்தில் 2-வது விக்கெட்டுக்கு இந்தியாவின் ரோகித் சர்மா, விராட் கோலி ஜோடி 60 ரன்கள் சேர்த்தது. இதையும் சேர்த்து அவர்கள் பார்ட்னர்ஷிப்பில் 8 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.

இந்தியா சார்பில் சச்சின் டெண்டுல்கர்-சவுரவ் கங்குலி ஜோடி 12,400 ரன்னும், ராகுல் டிராவிட்-சச்சின் டெண்டுல்கர் ஜோடி 11,037 ரன்னும் கடந்த ஜோடியாக திகழ்கின்றனர்.

ரோகித் சர்மா-விராட் கோலி ஜோடி சர்வதேச அளவில் 8000 ரன்களைக் கடந்த 9-வது ஜோடி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.