ஐ.பி.எல். 2026 சீசன் கிரிக்கெட் திருவிழா வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. போட்டி தொடங்க இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சிக்கு தயாராகி வருகின்றன.
டி20 உலகக் கோப்பையில் விளையாடிய வீரர்கள், ஐ.பி.எல். அணிகளுக்கு திரும்பி வருகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நீண்ட காலம் விளையாடி சஞ்சு சாம்சன் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்றுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனாக ரியான் பராக் உள்ளது. இவர் சஞ்சு சாம்சன் பற்றி கூறுகையில் "சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. ரோகித் சர்மா அல்லது விராட் கோலிக்கு நீங்கள் மாற்று நினைக்க முடியுமா?. அதே அடிப்படையில்தான் சஞ்சு சாம்சனுக்கு மாற்று என்பது இல்லை.
சஞ்சு சாம்சனுக்கு இணையான திறன் கொண்ட ஒருவரை முயற்சித்து பார்க்கலாம். அல்லது அந்த இடத்தில் யாராவது ஒருவரை பேட்டிங் செய்ய வைக்கலாம். ஆனால், அவரை ஈடு செய்ய முடியாது.