இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இவர் சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம் பிடிக்க முடியாமல் உள்ளனர்.
இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது.
ரிஷப் பண்ட் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் கடந்த மாதம் நடைபெற்ற இரானி கோப்பை தொடரில் விளையாடியபோது பக்கவாட்டி பகுதியில் (side strain) காயம் ஏற்பட்டது.
இதற்கான சிகிச்சை பெற்று வந்தார். காயம் குணமடைந்த நிலையில், பெங்களூருவில் உள்ள சிறப்பு மையத்தில் காயத்திற்கு பின் கிரிக்கெட் விளையாட்டிற்கு தயார் ஆவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று அவருக்கு பிட்னஸ் டெஸ்ட் நடைபெற்றது. இதில் ரிஷப் பண்ட் தேர்ச்சி பெற தவறிவிட்டார். இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒருமுறை பிட்னஸ் பயிற்சியை நிரூபிக்க பிசிசிஐ வாய்ப்பு வழங்கியுள்ளது.
ஒருவேளை இதிலும் உடற்தகுதியை நிரூபிக்கவில்லை என்றால், நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இடம் பெறுவது கடினம் ஆகும்.
நவம்பர் 7-ந்தேதி இந்தியா `ஏ' அணி நான்கு நாட்கள் கொண்டு அதிகாரப்பூர்வமற்ற 3-வது டெஸ்டில் நியூசிலாந்து `ஏ' அணியை எதிர்கொள்கிறது. ரிஷப் பண்ட் உடற்தகுதி பெற்றால் இந்த போட்டிக்காக உடனடியாக நியூசிலாந்து செல்வார்.
ரிஷப் பண்ட் டெஸ்ட் தொடரில் இடம் பிடிப்பாரா? என்ற கேள்விக்கு தலைமை பயிற்சியாளர் கம்பீர், அவரது காயம் குறித்த புதிய அப்டேட் தகவல் கிடைக்கப் பெறவில்லை என்றார்.