ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மிகவும் மதிப்புமிக்க அணிகளில் ஒன்று ஆர்.சி.பி. பல வருடங்கள் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை என்றாலும், ரசிகர்கள் அமோக ஆதரவு கொடுத்து வந்தனர்.
கடந்த 2025 சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற 18 வருட வறட்சியை போக்கினார். அதுமட்டுமல்லாமல் 2026 சீசனிலும் சாம்பியன் பட்டம் வென்றது.
2027 சீசனுக்கான ஐ.பி.எல். மினி ஏலம் டிசம்பர் 16-ந்தேதி நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக வருகிற 17-ந்தேதி வரை வீரர்களை Trade செய்து கொள்ள அனுமதி உள்ளது. பல்வேறு அணிகளை வீரர்களை Trade செய்து வருகிறது.
ஆனால், ஆர்.சி.பி. இதில் தலையிடவே இல்லை. இதற்கு காரணம் அந்த அணி கடந்த இரண்டு வருடமாக சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. வீரர்கள் செட் ஆகிவிட்டதால் சிறந்த அணியை கட்டமைத்துள்ளதாக ஆர்.சி.பி. எண்ணியுள்ளது. இதனால் சைலன்ட் ஆக இருக்கிறதாம். மினி ஏலத்திலும் மிகப்பெரிய அளவில் ஆர்வம் காட்டுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.