கிரிக்கெட்

கிளாசன் அதிரடி சதம் - பெங்களூரு வெற்றிபெற 187 ரன்களை நிர்ணயித்தது ஐதராபாத்

டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார் அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 186 ரன்களை குவித்துள்ளது.

Paramasivan

ஐதராபாத்:

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 11 ரன்னிலும், ராகுல் திரிபாதி 15 ரன்னிலும் அவுட்டாகினர்.

அடுத்து இறங்கிய கேப்டன் மார்கிராமுடன் கிளாசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்த நிலையில் மார்கிராம் 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பொறுப்புடன் ஆடிய கிளாசன் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 104 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் ஹாரி புரூக் 27 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை குவித்தது.

இதையடுத்து, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்குகிறது.