அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று பெல்பாஸ்டில் தொடங்கியது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் டாம் லாதம் டக் அவுட்டானார். டேவன் கான்வே 4 ரன்னில் வெளியேறினார். கேன் வில்லியம்சன்ம் 38 ரன்னிலும், டேரில் மிட்செல்க் ஒரு ரன்னிலும் அவுட்டாகினர்.
நியூசிலாந்து அணி 86 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
5வது விக்கெட்டுக்கு ரச்சின் ரவீந்திரா, டாம் பிளெண்டல் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் சதமடித்து அசத்தினர். இந்த ஜோடி 217 ரன்கள் சேர்த்த நிலையில் ரச்சின் ரவீந்திரா 121 ரன்னில் ஆட்டமிழந்தார்.
முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 361 ரன்கள் எடுத்தது. பிளெண்டல் 142 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
அயர்லாந்து சார்பில் மார்க் அடைர் 3 விக்கெட் வீழ்த்தினார்.