2026-27 சீசனுக்கான ரஞ்சி டிராபி கிரிக்கெட் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. முதல் போட்டியில் தமிழ்நாடு அணி ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியை டிரா செய்தது. 18-ந்தேதி தொடங்கிய உத்தரகாண்ட் அணிக்கெதிரான 2-வது போட்டியில் தமிழ்நாடு இன்னிங்ஸ் மற்றும் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் 3-வது போட்டி இன்று தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் தமிழ்நாடு ரெயில்வேஸ் அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற தமிழ்நாடு பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ரெயில்வேஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. சோனு யாதவ் சிறப்பாக பந்து வீச தொடக்க வீரர் சஹாப் யுவ்ராஜ் சிங் (4), எஷான் கோயல் (0), முகமது சைஃப் (0) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
சாய் கிஷோர் பந்தில் விவேக் சிங் (14), ராஜ் சவுத்ரி (7) ஆகியோர் வெளியேறினர். ஜுபைர் அலி மட்டும் தாக்குப்பிடித்து 75 ரன்கள் அடிக்க ரெயில்வேஸ் அணி 53.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 184 ரன்களில் சுருண்டது. தமிழ்நாடு அணி சார்பில் சோனு யாதவ், சாய் கிஷோர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் தமிழ்நாடு நாடு முதல் இன்னிங்சை தொடங்கியது. விமல் குமார் ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். என். ஜெகதீசன், பிரதோஷ் ரஞ்சன் பால் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.