இந்தியாவின் முதன்மையான முதல்தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபியின் 2026-2027 சீசன் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. எலைட் குரூப் டி-யில் தமிழ்நாடு அணி இடம் பிடித்துள்ளது. இந்த பிரிவில் மொத்தம் 8 அணிகள் இடம் பிடித்துள்ளது.
11-ந்தேதி தொடங்கிய போட்டியில் தமிழ்நாடு அணி ராஜஸ்தானை எதிர்கொண்டது இந்த போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. கரண் லம்பா 113 ரன்களும், ரோஹன் ராஜ்பார் 95 ரன்களும் சேர்க்க உத்தரகாண்ட் முதல் இன்னிங்சில் 363 ரன்கள் குவித்தது. தமிழ்நாடு அணி சார்பில் தீபேஷ் தேவேந்திரன், சரவண குமார் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. சாய் சுதர்சன் 3 ரன்களில் ஏமாற்றம் அடைந்தார். என். ஜெகதீசன் 55 ரன்களும், பிரதோஷ் ரஞ்சன் பால் 58 ரன்களும் அடித்தனர்.
சி. அந்த்ரே சித்தார்த் 81 ரன்கள் அடிக்க மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் தமிழ்நாடு முதல் இன்னிங்கில் 274 ரன்களில் ஆல்அவுட் ஆனது. 89 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் ராஜஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் மஹிபால் லாம்ரோர் 84 ரன்கள் அடிக்க ராஜஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து 2-0வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
இதனால் தமிழ்நாடு அணிக்கு 282 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடு அணி 23 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் எடுத்தபோது, 4-வது நாள் ஆட்டம் நிறைவு பெற்றது. இதனால் போட்டி டிராவில் நிறைவடைந்தது.
முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதால், ராஜஸ்தான் அணிக்கு 3 புள்ளிகளும், தமிழ்நாடு அணிக்கு 1 புள்ளிகளும் வழங்கப்பட்டன. குரூப் டி-யில் மும்பை அணி 7 புள்ளிகள் பெற்றது. ஹரியானா 6 புள்ளிகள் பெற்றன.