ரஞ்சி டிராபி தமிழ்நாடு அணி
கிரிக்கெட்

ரஞ்சி டிராபி: பிரதோஷ் ரஞ்சன் பால் டபுள் செஞ்சுரி, அஜித் ராம் சதம்- தமிழ்நாடு 571 ரன்கள் குவித்து டிக்ளேர்

அஜித் ராம் சதம் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு- சண்டிகர் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று சண்டிகரில் தொடங்கியது.

தமிழ்நாடு பேட்டிங்

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தமிழ்நாடு பிரதோஷ் ரஞ்சன் பால் சதத்தால் முதல் நாள் ஆட்ட முடிவில் தமிழ்நாடு 4 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் குவித்தது. ரஞ்சன் பால் 138 ரன்களுடனும், குருசாமி அஜிதேஷ் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அஜிதேஷ் நேற்றைய 34 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். அடுத்து பிரதோஷ் ரஞ்சன் பால் உடன் அஜித் ராம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

571 ரன்கள் குவித்து டிக்ளேர்

ரஞ்சன் பான் சதத்தை டபுள் செஞ்சுரியாக மாற்றினார். மறுமுனையில் அஜித் ராம் சதம் விளாசினார். ரஞ்சன் பால் 208 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனார். தமிழ்நாடு 7 விக்கெட் இழப்பிற்கு 571 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அஜிம் ராம் 115 ரன்களுடனும், சாய் கிஷோர் 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

2-வது நாள் முடிவில் சண்டிகர் 49/3

பின்னர் சண்டிகர் முதல் இன்னிங்சை தொடங்கியது. 2-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. சாய் கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

SCROLL FOR NEXT