உர்வில் படேல்
கிரிக்கெட்

ரஞ்சி டிராபியில் டபுள் செஞ்சுரி விளாசிய சி.எஸ்.கே. வீரர்

உர்வில் படேல் 214 பந்துகளில் இரட்டை சதம் விளாசினார்.

ரஞ்சி டிராபியில் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் போட்டியில் குஜராத்- கேரளா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் பேட்டிங் தேர்வு செய்தது. நேற்றைய முதல்நாள் ஆட்டத்தில் குஜராத் 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்திருந்தது, உர்வில் படேல் 63 ரன்களுடனும், விஷால் ஜெய்ஸ்வால் 50 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

2-வது நாள் ஆட்டம்

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜெய்ஸ்வால் 77 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கஜா 1 ரன்னிலும், அமித் தேசாய் 36 ரன்களிலும் ஆட்மிழந்தனர். ஆனால், உர்வில் படேல் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் சதத்தை இரட்டை சதமாக்கினார். 214 பந்துகளில் இரட்டை சதம் விளாசினார். இதனால் குஜராத் அணி 500 ரன்களை தாண்டியுள்ளது.

முதல் இரட்டை சதம்

முதல் தர போட்டியில் உர்வில் படேலின் முதல் இரட்டை சதம் இதுவாகும். உர்வில் படேல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிடில் ஆர்டர் வரிசையில் அதிரடி பேட்ஸ்மேனாக திகழந்து வருகிறார்.

2026 ஐபிஎல்

2026 ஐபிஎல் சீசன் உர்வில் படேலுக்கு சிறப்பானதாக அமையவில்லை 7 போட்டிகளில் களம் இறங்கி 129 ரன்கள் மட்டுமு சேர்த்தார். இதில் ஒரு அரைசதம் அடங்கும்.

SCROLL FOR NEXT