கிரிக்கெட்

சென்னைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு

சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டுமானால் எஞ்சிய 2 ஆட்டங்களில் சி.எஸ்.கே. கண்டிப்பாக வெல்ல வேண்டும்.

மாலை மலர்

சென்னை:

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது.

நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டுமானால் எஞ்சிய 2 ஆட்டங்களில் சி.எஸ்.கே. கண்டிப்பாக வெல்ல வேண்டும். அதே நேரத்தில் ரன் ரேட்டையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

இத்தகைய இக்கட்டான கட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ராஜஸ்தான் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.