கிரிக்கெட்

பெண்களை கௌரவிக்கும் வகையில் பிங்க் நிற ஜெர்சி அணிந்து விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ்

வரும் ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் மட்டும் மட்டும் பிங்க் நிற ஜெர்சி அணிந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளதுஇதற்கான ஜெர்சியை ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், மற்றும் அணியின் பயிற்சியாளர் குமார் சங்ககாரா அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மாலை மலர்

வரும் ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் மட்டும் மட்டும் பிங்க் நிற ஜெர்சி அணிந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள மகளிரை கௌரவிக்கும் வகையில் பிங்க் நிற ஜெர்சியில் விளையாட உள்ளோம் என ராஜஸ்தான் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தான் முழு பிங்க் நிற ஜெர்சியில் ராஜஸ்தான் அணி விளையாடுகிறது.

இதற்கான ஜெர்சியை ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், மற்றும் அணியின் பயிற்சியாளர் குமார் சங்ககாரா அறிமுகப்படுத்தியுள்ளனர்.