ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 58-ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. அந்த அண்யின் ப்ரியன்ஷ் ஆர்யா 22 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 57 ரன்களும், கூப்பர் கனொலி 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதில் பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியான்ஷ் ஆர்யா ஜோடி ஐ.பி.எல். வரலாற்றில் புது சாதனை படைத்துள்ளது. நேற்றைய போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், இந்த ஜோடி ஐ.பி.எல். வரலாற்றில் 1000 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்த முதல் அன்கேப்டு (இந்திய அணியில் இடம்பிடிக்காத) வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர். இந்த ஜோடி ஓபனிங் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது.
எனினும், பிரியான்ஷ் ஆர்யா 22 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் முதல் இரண்டு ஐ.பி.எல். தொடர்களில் 350-க்கும் அதிக ரன்களை அடித்த இரண்டாவது அன்கேப்டு இந்திய வீரர் என்ற பெருமையை பிரியாஷ் ஆர்யா படைத்துள்ளார். கடந்த 2025 ஐ.பி.எல். தொடரில் இவர் 475 ரன்களை குவித்திருந்த நிலையில், 2026 ஐ.பி.எல். தொடரில் இதுவரை இவர் 357 ரன்களை குவித்துள்ளார்.
முன்னதாக 2010-ஆம் ஆண்டு அம்பத்தி ராயுடு 356 ரன்களும், 2011-ஆம் ஆண்டு 395 ரன்களும் குவித்து இந்தப் பட்டியலில் இடம்பிடித்த முதல் வீரர் ஆனார். இதேபோல் பல ஐ.பி.எல். தொடர்களில் 400-க்கும் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் பிரப்சிம்ரன் சிங் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். இவர் கடந்த 2025 ஐ.பி.எல். தொடரில் 549 ரன்களும், நடப்பு 2026 ஐ.பி.எல். தொடரில் இதுவரை 438 ரன்களும் குவித்துள்ளார்.
முன்னதாக சூர்யகுமார் யாதவ் (2018, 2019) காலக்கட்டத்திலும், அபிஷேக் சர்மா (2022 மற்றும் 2024) ஆண்டுகளில் 400-க்கும் அதிக ரன்களை குவித்தனர்.