பிரேமா ராவத்
கிரிக்கெட்

மகளிர் டி20-யில் அதிவேக அரைசதத்தை பதிவு செய்த இந்திய வீராங்கனை பிரேமா ராவத்..!

14 பந்துகளில் அரைசதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார்.

இந்தியாவில் சீனியர் பெண்களுக்கான டி20 கிரிக்கெட் (Senior Women's T20 Trophy) தொடர் நடைபெற்று வருகிறது. புனேயில் நடைபெற்ற போட்டியில் உத்தரகாண்ட்- ஐதராபாத் அணிகள் மோதின. உத்தரகாண்ட் முதலில் பேட்டிங் செய்தது.

14 பந்துகளில் அரைசதம்

4-வது வீரராக களம் இறங்கிய பிரேமா ராவத் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 18-வது ஓவரில் பேட்டிங் செய்ய வந்தார். வேகப்பந்து வீச்சாளர் சாக்ஷி ராவ் வீசிய இந்த ஓவரில் தொடர்ந்து 3 சிக்சர்கள் விளாசினார்.

ஆஃப் ஸ்பின்னர் வங்கா பூஜா வீசிய 19-வது ஓவரில் 18 ரன்கள் விளாசினார். கடைசி ஓவரை குஞ்சலா நிதீஷா வீசினார். இந்த ஓவரின் கடைசி 4 பந்துகளில் 6,4,4,6 என விளாசினார். இதன்மூலம் 15 பந்தில் 54 ரன்கள் குவித்தார்.

அத்துடன் 14 பந்தில் அரைசதம் விளாசிய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவருடன் விளையாடிய ராக்வி பிஸ்ட் 50 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

15 பந்துகளில் அரைசதம்

இதற்கு முன்னதாக 2022-ல் வார்விக்ஷைர் அணிக்காக விளையாடிய மேரி கெல்லி, பாகிஸ்தான் அணியின் பாத்திமா சனா (2026), லாரா ஹாரிஸ் (ஒட்டாகோ (2025) மற்றும் சர்ரே (2026)) ஆகியோர் 15 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தனர்.

ஆண்கள் அணியில் அதிவேக அரைசதம்

ஆண்களுக்கான டி20-யில் திபெந்திர சிங் எய்ரீ 9 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். அதன்பின் யுவராஜ் சிங், குஷால் மல்லா ஆகியோர் தலா 12 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளனர். கெய்ல் 13 பந்துகளில் அடித்துள்ளார்.

SCROLL FOR NEXT