கிரிக்கெட்

இந்திய அணிக்கான தேர்வுக்குழு தலைவராகும் பிரக்யான் ஓஜா

ஒரு இருதரப்பு தொடரின் போது நான்கு தேர்வாளர்களும் ஒன்றாக இருப்பது வழக்கமானதல்ல.

அஜித் அகர்கர் விலகியதைத் தொடர்ந்து, முன்னாள் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா, தற்போதைக்கு நான்கு பேர் கொண்ட தேர்வுக் குழுவின் இடைக்காலத் தலைவராக இருப்பார். மேலும், அவர் அடுத்த தலைமை தேர்வாளராக பொறுப்பேற்க உள்ளார்.

திருவனந்தபுரத்தில் இருந்து கவுகாத்திக்கு நீண்ட விமான பயணத்திற்கு பிறகு இந்திய அணி ஒரு நாள் ஓய்வில் இருந்தபோது, ​​செவ்வாயன்று மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முந்தைய நாள், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நான்கு பேர் கொண்ட தேசிய தேர்வு குழுவுடன் நீண்ட நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். ஒரு இருதரப்பு தொடரின் போது நான்கு தேர்வாளர்களும் ஒன்றாக இருப்பது வழக்கமானதல்ல.

எனவே, இந்தியாவின் வரவிருக்கும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, கம்பீருடனான அவர்களின் சந்திப்பு குறிப்பிடத்தக்கதாக அமைகிறது.

கவுதம் கம்பீர் ஆலோசனை:

தேர்வாளர்கள், டெஸ்ட் அணியுடன் சேர்த்து, மூன்று இந்தியா 'ஏ' பிரிவு டெஸ்ட் போட்டிகள், டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணிகளையும் தேர்வு செய்ய வேண்டும்.

கடைசி ஒருநாள் போட்டி நவம்பர் 15 அன்று தௌரங்காவிலும், முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 19 அன்று வெலிங்டனிலும் தொடங்க இருப்பதால், ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ள சில முக்கிய டெஸ்ட் வீரர்கள், பயிற்சி அமர்வுகளுக்காக முன்கூட்டியே விடுவிக்கப்படலாம்.

செவ்வாயன்று, மேற்கிந்திய தீவுகள் அணி தங்களது பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ​​பார்சபாரா மைதானத்தின் ஓரத்தில் கம்பீர், ஷிவ் சுந்தர் தாஸ், அஜய் ராத்ரா, ஆர்.பி. சிங் மற்றும் பிரக்யான் ஓஜா ஆகியோருடன் கலந்துரையாடலை நடத்தினார்.

அப்போது, ​​பதவியில் இருந்து விலகும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் அங்கு இருக்கவில்லை. 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஓஜா, தற்போது தேர்வு குழுவின் இடைக்கால தலைவராக உள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து தொடர்:

வரவிருக்கும் நியூசிலாந்து தொடருக்கான அணியை தேர்வு குழு இறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த கலந்துரையாடல் இந்தியாவின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் தொடர்பாக நடைபெற்றதாக தெரிகிறது.

இந்திய அணி அக்டோபர் 22-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 27 வரை நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடர் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட கட்டத்துடன் தொடங்குகிறது, இதன் தொடக்க ஆட்டம் அக்டோபர் 22 அன்று கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற உள்ளது.

மற்றொரு வாய்ப்பு:

இதைத் தொடர்ந்து, நவம்பர் 4 ஆம் தேதி ஆக்லாந்தில் தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறும். இந்த சுற்றுப்பயணம், நவம்பர் 19 ஆம் தேதி முதல் வெலிங்டன் மற்றும் கிறிஸ்ட்சர்ச் ஆகிய இடங்களில் நடைபெறும் இரண்டு டெஸ்ட் போட்டிகளுடன் நிறைவடையும்.

2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான ஆயத்த பணிகள் ஏற்கனவே வேகம் பெற்றுவரும் நிலையில், பல்வேறு வடிவங்களில் உள்ள வீரர்களின் சேர்க்கை மற்றும் பணிச்சுமைகளை மதிப்பிடுவதற்கு, அணி நிர்வாகத்திற்கும் தேர்வாளர்களுக்கும் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மற்றொரு வாய்ப்பை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT