கிரிக்கெட்

ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள்: சாதனை படைத்த பில் சால்ட்

முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 182 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 185 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது

பார்படாஸ்:

வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 182 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 185 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியின் பில் சால்ட் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார்.

இந்நிலையில், இந்தப் போட்டியில் பில் சால்ட் சதமடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய வீரர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பில் சால்ட் 3 சதம் விளாசியுள்ளார். அந்த மூன்று சதங்களும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT