கிரிக்கெட்

ஜூனியர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு

அரையிறுதியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் மோதின.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

முதல் அரையிறுதியில் இந்தியா ஆப்கானிஸ்தானையும், பாகிஸ்தான் வங்கதேசத்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்நிலையில், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்ய களமிறங்குகிறது.

SCROLL FOR NEXT