பாகிஸ்தான் அணி
கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிராக படுதோல்வி: இரண்டு முக்கிய வீரர்களை நாடு திரும்ப கேட்டுக்கொண்டு பாகிஸ்தான்

இரண்டு போட்டிகளில் மோசமான தோல்வியை சந்தித்து தொடரை இழந்துள்ளது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. இரண்டாவது போட்டியில் 194 ரன்களில் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரை 0-2 என இழந்துள்ளது. 3-வது போட்டி வருகிற 9-ந்தேதி (செப்டம்பர்) நடைபெற இருக்கிறது.

முகமது ரிஸ்வான்

இந்த நிலையில் விக்கெட் கீப்பரான முகமது ரிஸ்வான் மற்றும் தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் ஆகியோரை சொந்த நாடு திரும்ப பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.

இமாம்-உல்-ஹக்

இமாம்-உல்-ஹக் 2-வது போட்டியின் முதல் நாளில் காயம் காரணமாக வெளியேறினார். பாகிஸ்தான் மோசமான நிலையில் இருந்தபோதிலும் பேட்டிங் செய்ய வரவில்லை. 3-வது நாள் ஆட்டத்தின்போது, த்ரோடவுன் பயிற்சி மேற்கொண்டார். அப்போது காலில் டேப் அணிந்து வந்திருந்தார். இதை வர்ணனையாளர் விமர்சித்திருந்தார். இதற்கிடையே அவர் தனக்கு காயம் ஏற்பட்டதாக பொய் சொல்லியுள்ளார் என சர்ச்சை எழுந்துள்ளது.