பாகிஸ்தான் அணி தற்போது வெஸ்ட் இண்டீசில் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது.
பாகிஸ்தான் அணி அடுத்த ஆண்டில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் அடுத்த ஆண்டு மே 15-ம் தேதி சவுத்தாம்ப்டனில் தொடங்குகிறது.
2வது போட்டி 19-ம் தேதி மான்செஸ்டரிலும், 3வது போட்டி 21-ம் தேதி லீட்சிலும், 4வது போட்டி 23-ம் தேதி செஸ்டர் லீ -ஸ்ட்ரீட்டிலும், 5வது ஒருநாள் போட்டி 25-ம் தேதி கார்டிப்பிலும் நடைபெறுகிறது.
முன்னதாக, கடந்த 2021-ம் ஆண்டில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் அணி 0-3 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்தது.