முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற 326 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை அணி.
பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் பங்கேற்றுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. லீக் போட்டிகள் முடிவில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இங்கிலாந்து தொடரில் இருந்து வெளியேறியது.
இந்நிலையில், முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி லாகூரில் இன்று நடைபெறுகிறது. இதில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான்பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 325 ரன்களை எடுத்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரரான கமிந்து மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.
3வது விக்கெட்டுக்கு இணைந்த கமிந்து மெண்டிஸ், பவன் ரத்னநாயகே ஜோடி அதிரடியாக ஆடியது. இந்த ஜோடி 118 பந்தில் 146 ரன்கள் குவித்தது.
பவன் ரத்னநாயகே அரை சதம் கடந்து 77 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய கமிந்து மெண்டிஸ் 131 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 325 ரன்களைக் குவித்தது.
பாகிஸ்தான் சார்பில் சல்மான் ஆகா, ஷாஹின் அப்ரிடிம் ஹரிஸ் ராப், நசீம் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது.