மைக் ஹெசன்
கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியை புகழ்ந்து தள்ளிய பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர்..!

தற்போதைய நிலையில் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் இந்தியா ஒரு சிறந்த அளவுகோலாக திகழ்கிறது.

ஆசிய விளையாட்டு போட்டி இறுதிப் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோத வாய்ப்புள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்தை சேர்ந்த மைக் ஹெசன் உள்ளார். பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் ஆசிய விளையாட்டு போட்டியில் விளையாட உள்ளது. இரண்டு அணிகளும் வெவ்வேறு பிரிவுகளில் உள்ளன. ஒருவேளை இறுதிப் போட்டிக்கு இரு அணிகளும் முன்னேறினால், இரு அணிகளும் நேருக்குநேர் மோதும் சூழ்நிலை உருவாகும்.

பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி 6 போட்டிகளில் இந்தியா வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசியாக விளையாடிய 6 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதில் 2025 ஆசிய கோப்பை இறுதிப் போட்டி உள்பட 3 போட்டிகளில் மிகவும் பரபரப்பான நிலையை எட்டியது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மைக் ஹெசன் உள்ளார். இவர் இந்திய அணியை வெகுவாக பாராட்டியுள்ளார்.

மைக் ஹெசன் பாராட்டு

இந்திய ஒயிட்-பால் அணி குறித்து பாகிஸ்தான் தலைமை பயிற்சியார் மைக் ஹெசன் கூறியதாவது:-

தற்போதைய நிலையில் ஒயிட்-பால் (white-ball) கிரிக்கெட்டில் இந்தியா ஒரு சிறந்த அளவுகோலாக (Benchmark) திகழ்கிறது. அவர்களை சமன் செய்வதே எங்களுக்கு முன்னால் உள்ள சவால். இந்தியாவுடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால், ஆசியக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் நாங்கள் செய்தது போலவே அவர்களுக்கும் நெருக்கடி கொடுக்கும் வகையில், எங்களால் முடிந்த சிறந்த தயார்படுத்துதலை மேற்கொண்டு வருகிறோம்.

அதே சமயம், இரு அணிகளும் மீண்டும் ஒரு இறுதிப் போட்டியில் மோதுவதற்கு முன்னதாக இன்னும் நிறைய ஆட்டங்கள் விளையாடப்பட வேண்டியுள்ளன. எனவே, நாங்கள் இப்போதே வெகுதூரம் முன்னோக்கிச் சிந்திக்கவில்லை.

2-ம் நிலை அணியை அனுப்பும் பாகிஸ்தான்

இந்தியாவை போலன்றி, பாகிஸ்தான் 2-ம் நிலை அணியுடன் விளையாடினாலும், இது இப்போதும் ஒரு சமச்சீரான மற்றும் ஆக்ரோஷமான அணியாகவே உள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகள், புதிய மற்றும் திறமையான விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு சிறந்த தளத்தை வழங்குகின்றன. சாஹிப் சதா ஃபர்ஹானைப் பொறுத்தவரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அணித் தலைவராகச் செயல்படுவதற்கான அனுபவத்தைப் பெறுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

இவ்வாறு மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT