கிரிக்கெட்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இரு இடங்கள் முன்னேறிய பாகிஸ்தான்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 1-0 என கைப்பற்றியது.

ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணி 2 இடம் முன்னேறியுள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது.

இந்நிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது.

2 இடம் முன்னேறிய பாகிஸ்தான்

இந்தப் பட்டியலில் 9வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி இரு இடம் முன்னேறி 7வது இடம் பிடித்துள்ளது.

பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த இலங்கை அணி 7வது இடத்தில் இருந்து 2 இடம் பின்தங்கி 9வது இடம் பிடித்தது.

தரவரிசையில் டாப் 5

தென் ஆப்பிரிக்கா முதலிடத்திலும், நியூசிலாந்து இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா 3வது இடத்திலும், இந்திய அணி 4வது இடத்திலும், இங்கிலாந்து 5வது இடத்திலும் உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் 6வது இடத்திலும், வங்கதேசம் 8வது இடத்திலும், ஜிம்பாப்வே 10-வது இடத்திலும் உள்ளன.

SCROLL FOR NEXT