கிரிக்கெட்

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய பாகிஸ்தான் வீரர் முகமது நவாஸ்..ஐசிசி எடுத்த முக்கிய முடிவு

நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில், முகமது நவாஸ் ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியின் போது, ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டி தொடர்ந்து பாகிஸ்தான் நட்சத்திர ஆல்-ரவுண்டர் முகமது நவாஸுக்கு ஐசிசி மூன்று மாதங்கள் விதித்த தடையை தற்போது ரத்து செய்துள்ளது.

இலங்கையில் இந்த ஆண்டு பிப்ரவரி 7 அன்று நெதர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டிக்கு பிறகு, பாகிஸ்தான் அணி வீரர் முகமது நவாஸ் ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

ஊக்கமருந்து சோதனை சிக்கிய முகமது நவாஸ்:

இதையடுத்து கஞ்சா உட்கொண்ட பிறகு கல்லீரலில் உருவாகும் செயலற்ற வளர்சிதை மாற்ற பொருளான கார்பாக்ஸி-THC, அவரின் உடலில் இருந்தது சோதனை மூலம் கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து நவாஸ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு, அந்த பொருளை போட்டிக்கு வெளியே உட்கொண்டதாகவும், போட்டியின் செயல்திறனுக்காக பயன்படுத்தவில்லை என்றார். மேலும், ஐசிசி-யின் தண்டனையை ஏறு்றுக் கொள்ளவதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஐசிசி கடந்த மே மாதத்தில் இருந்து அவருக்கு 3 மாதக்காலம் தடைவிதித்தது. இதில் இரண்டரை மாதக் காலம் புனர்வாழ்வு (rehabilitation) திட்டத்தில் சிகிச்சை மேற்்கொண்டு சிறப்பாக அந்த காலக்கட்டத்தை முடித்தால், தண்டனை ஒரு மாதக்காலமாக குறைக்கப்படும் என்றது ஐசிசி.

ஐசிசி-யின் நிபந்தனையின்படி நேற்று முன்தினத்துடன், வெற்றிகரமாக புனர்வாழ்வு காலத்தை முடித்தார். இதனைத் தொடர்ந்து, குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன், புனர்வாழ்வு சிகிச்சையையும் வெற்றிகரமகா முடித்ததால், ஒரு மாதக்காலம் தடை தேவையில்லை என்று ஐசிசி அவர் மீதான தடையை ரத்து செய்தது.

இதனால் அவர் இனிமேல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியும்.