கிரிக்கெட்

ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்: அரையிறுதிக்கு முன்னேறிய பாகிஸ்தான், வங்கதேசம்

மைதானம் ஈரமாக இருந்ததால் டாஸ் கூட போடாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

ஆசிய விளையாட்டில் பெண்கள் கிரிக்கெட்டின் அரையிறுதி சுற்றுக்கு பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் முன்னேறின.

ஆசிய விளையாட்டில் பெண்கள் கிரிக்கெட்டின் காலிறுதி போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகின்றன.

ஜப்பானின் நிஷின் நகரில் நடைபெற்ற 2வது காலிறுதி போட்டியில் பாகிஸ்தான், தாய்லாந்து வீராங்கனைகள் மோதினர்.

மழை காரணமாக போட்டி 11 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய தாய்லாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தான் திணறல்

அடுத்து ஆடிய பாகிஸ்தான் 47 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது, ஜோடி சேர்ந்த கேப்டன் பாத்திமா சனா - ஏமன் பாத்திமா ஜோடி அதிரடியாக ஆடியது.

இறுதியில், பாகிஸ்தான் 10.4 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறியது.

அரையிறுதியில் வங்கதேசம்

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் வங்கதேசம், சீனா அணிகள் மோதவிருந்தன. மைதானம் ஈரமாக இருந்ததால் டாஸ் கூட போடாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

ஐசிசி டி20 தரவரிசையில் வங்கதேசம் 10-வது இடத்திலும், சீனா 36-வது இடத்திலும் உள்ள நிலையில், தரவரிசை அடிப்படையில் வங்கதேச அணி அரையிறுதிக்கு முன்னேறியது

SCROLL FOR NEXT