இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 133 ரன்களுக்கு சுருண்டது.
இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை திணறடித்தனர்.
அசான் அவைஸ் 9 ரன்னிலும், அப்துல்லா ஷபீக் 3 ரன்னிலும், ஷான் மசூத் 5 ரன்னிலும், கேப்டன் பாபர் அசாம் வெறும் 7 ரன்னிலும் வெளியேறினர்.
அந்த அணியின் சவுத் ஷகீல் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 43 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 133 ரன்களுக்கு சுருண்டது.
இங்கிலாந்து சார்பில் ஜோஷ் டங் 4 விக்கெட்டும், ஆலி ராபின்சன், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆலி ராபின்சன் தனது 100-வது டெஸ்ட் விக்கெட்டையும் கைப்பற்றினார்.