பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்தது.
முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் - இலங்கை அணிகள் தகுதி பெற்றன. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 191. ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
இதன்மூலம் முத்தரப்பு டி20 தொடரை பாகிஸ்தான் அணி வென்றது. 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது நவாஸ் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.