பாபர் அசாம்- ஷகீல்
கிரிக்கெட்

ராவல்பிண்டி டெஸ்ட்: இலங்கைக்கு எதிராக முதல் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 281/5

பாகிஸ்தானின் நான்கு வீரர்கள் அரைசதம் அடித்தனர்.

பாகிஸ்தான்- இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணி, தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடியது.

நான்கு வீரர்கள் அரைசதம்

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் தய்யப் ஆரிஃப் சிறப்பாக விளையாடி 51 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். அசான் அவைஸ் 50 பந்துகளில் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரரும் கேப்டனுமான பாபர் அசாம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 58 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இதற்கிடையே முகமது தாஹா 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சல்மான் ஆகா 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 6-வது விக்கெட்டுக்கு சவுத் ஷகீல் உடன் காஜி கோரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.

முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 281/5

பாகிஸ்தான் 67.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்திருக்கும்போது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்ட நிறுத்தப்பட்டது. அத்துடன் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஷகீல் 57 ரன்களுடனும், கோரி 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இலங்கை அணியின் அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

SCROLL FOR NEXT