கிரிக்கெட்

OG Vs OG: ஆர்.சி.பி.க்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு தேர்வு

நடப்பு தொடரில் விளையாடிய 3 ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது.

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 20வது லீக் தொடர் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ஆர்சிபியுடன் பலப்பரீட்சை நடத்துகின்றது.

மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்ற நிலையில் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்கிறது.

தொடரில் முன்னதாக நடைபெற்ற ஆட்டங்களில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி ஒரு முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐ வீழ்த்தி ஒரு முறையில் என 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதே நேரம் ஏப்ரல் 10 நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் இடம் தோற்றது ஆர்சிபி.

அதேநேரம் நடப்பு தொடரில் விளையாடிய 3 ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது.

இதற்கிடையே மும்பை இந்தியன்ஸ் அணியில் விராட் கோலிக்கு இணையான வீரர் ரோகித் சர்மா இடம்பெற்றுள்ளார். இதனால் இந்த போட்டி இந்திய கிரிக்கெட் அணியில் இரு பெரும் வீரர்கள் எதிரெதிர் சந்தித்துக்கும் போட்டியாகவும் உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.