கிரிக்கெட்

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

இலங்கை சார்பில் அதிகபட்சமாக மலிங்கா 4 விக்கெட்டுகளும், பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த சர்வதேச ஒருநாள் முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில், இலங்கை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

பாக். ரன் குவிப்பு:

பாகிஸ்தானின் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடந்த போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 305 ரன்கள் குவித்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் சிறப்பாக விளையாடிய சல்மான் ஆஹா 107 (90) ரன்கள் குவித்து அசத்தினார். இலங்கை அணியின் சார்பில் அதிகபட்சமாக மலிங்கா 4 விக்கெட்டுகளும், பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இலங்கை போராட்டம் வீண்:

50 ஓவர்களில் 306 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, 48.1 ஓவர்களில் அனைத்து 268 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் காரணமாக இலங்கை அணி தோல்வியை தழுவியது.

இலங்கை அணி சார்பில் பவன் ரத்நாயக்க 79 ரன்களும், ஜனித் லியனகே 60 ரன்களும், கமிந்து மெண்டிஸ் 44 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை அணிக்கு துவக்கம் மற்றும் மிடில் ஆர்டர் வீரர்களில் சிலர் சிறப்பாக செயல்பட்டு ரன் குவித்த நிலையில், பின்வரிசை வீரர்களால் எதிர்பார்த்த அளவுக்கு ரன்களை எடுக்க முடியவில்லை. இதனால் இலங்கை அணி 37 ரன்களில் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

SCROLL FOR NEXT