இந்தியா- நியூசிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. இன்று நடைபெற இருந்த 3-வது போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
4-வது மற்றும் 5-வது போட்டிக்கான இந்திய அணியில் சுப்மன் கில், கே.எல். ராகுல் இடம் பெறவில்லை. டெஸ்ட் போட்டிக்கு தயாராக இருப்பதால் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஷ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுப்மன் கில், கே.எல். ராகுல் இல்லாததால் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஆடும் லெவனில் இடம் பெற வாய்ப்புள்ளது.
4-வது போட்டி 13-ந்தேதியும், 5-வது மற்றும் கடைசி போட்டி 15-ந்தேதியும் நடக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வெலிங்டனில் 19-ந்தேதி தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் 27-ந்தேதி தொடங்குகிறது.