கிரிக்கெட்

இன்று 4வது டி20: தொடரை முழுமையாக கைபற்றும் முனைப்பில் இந்திய அணி

தொடரை கைப்பற்றிவிட்டதால் இதுவரை இடம் பெறாத வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதற்கட்டமாக இரு அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடந்த மூன்றாவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

4-வது டி20 போட்டி:

இந்த நிலையில், இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் நான்காவது டி20 போட்டி ஆக்லாந்து மைதானத்தில் இன்று (அக். 30) நடக்கிறது. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணியின் வெற்றி பாதை தொடருமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றிய நிலையில், தற்போது தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.

மறுபுறம் தொடரை இழந்த நியூசிலாந்து அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கும். அந்த அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது. நியூசிலாந்தின் பேட்டிங் வலுவாகவே இருக்கிறது. பந்து வீச்சு தான் மிகவும் பலவீனமாக காணப்படுகிறது. கடைசி 2 போட்டியில் நியூசிலாந்து வீரர்கள் பெர்குசன், ஹென்றி விளையாடவில்லை.

இந்திய அணியில் மாற்றங்கள்:

கடந்த போட்டியில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். இதேபோல தொடக்க வரிசையில் வாய்ப்பளிக்கப்பட்ட இளம் வீரர் சூர்யவன்ஷியும் மிகவும் அபாரமாக செயல்பட்டார்.

சஞ்சு சாம்சன், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், நமன் திர், திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். கடந்த 3 ஆட்டத்திலும் இந்தியாவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. தொடரை கைப்பற்றிவிட்டதால் இதுவரை இடம் பெறாத வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.

SCROLL FOR NEXT