ரோகித் சர்மா- விராட் கோலி
கிரிக்கெட்

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டின் மாஸ்டர்கள்: நியூசிலாந்து கேப்டன் புகழாரம்

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் ஒருநாள் போட்டிகளில் வல்லவர்கள்.

இந்திய அணி இந்த வருடம் இறுதியில் நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் ஐந்து ஒருநாள், ஐந்து டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்கள். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி 2027 உலகக் கோப்பையில் விளையாடுவார்களா? என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் மாஸ்டர்கள் என்று நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக மிட்செல் சான்ட்னர் கூறியதாவது:-

இந்தியாவுக்கு எதிரான தொடர் ஒரு சவாலாக இருக்கப்போகிறது. நீண்ட காலமாக நாம் பார்த்து வருவது போல, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் இப்போதும் மிகச் சிறந்த வீரர்கள். ஒருநாள் போட்டிகளில் வல்லவர்கள். கடந்த காலங்களில் நியூசிலாந்தின் சில ஆடுகளங்கள் அவர்களுக்குப் பிடித்தமானவையாக இருந்திருக்கின்றன. இம்முறை அப்படி அமையாது என்று நம்புவோம்.

சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவதுதான் இலக்கு

நாங்கள் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகளில் விளையாட இருக்கிறோம். இலங்கைக்கு எதிராக 3 போட்டிகளில் விளையாட இருக்கிறோம். அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக அடுத்த வருடம் விளையாட இருக்கிறோம். இந்த போட்டிகள் 2027 உலகக் கோப்பை தொடருக்கான சரியான வகையில் தயாராகுதலாக இருக்கும்.

இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவதை நீங்கள் விரும்புவீர்கள். அது ஒரு மிகச்சிறந்த விஷயமாக இருக்கும். அதன்பிறகு, அடுத்த ஆண்டு அக்டோபரில் அணியின் கட்டமைப்பு எப்படி இருக்கக்கூடும் என்பதைக் கண்டறிய முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு சான்ட்னெர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT