கிரிக்கெட்

உலகக் கோப்பை நாக்அவுட்டில் நியூசிலாந்திற்கு எதிராக மோசம்: வரலாற்றை மாற்றி அமைக்குமா தென்ஆப்பிரிக்கா? #T20 World Cup Semi Final

ஐசிசி நாக்அவுட் போட்டிகளில் நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது.இந்த முறை தென்ஆப்பிரிக்கா அணி எளிதாக விட்டுக்கொடுக்க வாய்ப்பில்லை.

மாலை மலர்

ஐசிசி தொடரில் மிகவும் எதிர்பார்க்கும் அணியாக தென்ஆப்பிரிக்கா எப்போதுமே திகழ்ந்து வரும். ஆனால் அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தில் நாக்அவுட் சுற்றில் ஏமாற்றம் அளிக்கும். அதேவேளையில் நட்சத்திர அணியாகவே திகழாது நியூசிலாந்து. ஆனால் வீறுகொண்டு எழுந்து விளையாடுவார்கள்.

இப்போதும் அதேபோன்றுதான் தென்ஆப்பிரிக்கா ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து இலங்கை தயவால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்த இரு அணிகளும் இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறும் அரையிறுதியில் மோதுகின்றன. இதற்கு முன்னதாக மூன்று முறை இரு அணிகளும் உலகக் கோப்பை நாக்அவுட் போட்டியில் விளையாடியுள்ளன. மூன்று முறையும் நியூசிலாந்துதான் வெற்றி வாகை சூடியுள்ளது.

2011 உலகக் கோப்பை காலிறுதி, 2015 உலகக் கோப்பை அரையிறுதி, 2025 சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி ஆகியவற்றில் தென்ஆப்பிரிக்காவை நியூசிலாந்து வீழ்த்தியுள்ளது.

ஆனால் இந்த முறை தென்ஆப்பிரிக்கா மிகவும் வலுவான அணியாக திகழ்கிறது. இதனால் பழைய வரலாற்றை மாற்றும் என்று எதிர்பார்க்கலாம்.