கிரிக்கெட்

சோனு யாதவ் 5 விக்கெட் வீழ்த்தி அபாரம்: சேலம் 141 ரன்களுக்கு ஆல் அவுட்

முதலில் ஆடிய சேலம் அணி 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.நெல்லை அணி சார்பில் சோனு யாதவ் 5 விக்கெட் கைப்பற்றினார்.

மாலை மலர்

சேலம்:

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் சேலத்தில் நடந்துவருகிறது. லீக் சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இந்நிலையில், டி.என்.பி.எல். தொடரில் சேலத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி, சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே நெல்லை அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர்.

இதனால் சேலம் அணியின் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க தடுமாறினர்.

இறுதியில், சேலம் அணி 19.2 ஓவரில் 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ராபின் 23 ரன்கள் எடுத்தார்.

நெல்லை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சோனு யாதவ் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து, 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்குகிறது.