ரகானே- விராட் கோலி
கிரிக்கெட்

ரகானேயின் ஆல்-டைம் இந்திய டெஸ்ட் லெவன் அணியில் விராட் கோலி, பும்ராவுக்கு இடமில்லை

முகமது ஷமி, இஷாந்த் சர்மா, புவி ஆகியோரை வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்வு செய்துள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக திகழ்ந்தவர் ரகானே. 20 வருடங்களாக இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடியுள்ளார். ரகானே வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாடக் கூடியவர். இவர் சச்சின் தெண்டுல்கர், டிராவிட் உள்ளிட்ட தலைசிறந்த வீரர்களுடன் டிரஸ்ஸிங் ரூமை பகிர்ந்துள்ளார்.

விராட் கோலி, பும்ராவுக்கு இடமில்லை

ரகானே தன்னுடன் விளையாடிய வீரர்களை கொண்டு ஆல்-டைம் இந்திய டெஸ்ட் அணியை வெளியிட்டுள்ளார். இதில் விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோருக்கு இடம் கொடுக்கவில்லை. மாடர்ன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியை மற்றும் பும்ராவை எளிதில் தவிர்க்க முடியாது. ஆனால், ரகானே அவர்களுக்கு இடம் கொடுக்கவில்லை.

முரளி விஜய் மற்றும் தவானை தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளார். ராகுல் டிராவிட்டிற்கு 3-வது இடமும், சச்சின் தெண்டுல்கருக்கு 4-வது இடமும் வழங்கியுள்ளார். அவருக்கு ஐந்தாவது இடத்தை வழங்கியுள்ளார்.

எம்.எஸ். தோனி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்

எம்.எஸ். தோனியை விக்கெட் கீப்பர் கேப்டனாக தேர்வு செய்துள்ளார். சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜாவை தேர்வு செய்துள்ளார். வேகப்பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், முகமது சமி, இஷாந்த் சர்மா ஆகியோரை தேர்வு செய்துள்ளார். உலகின் எந்த இடங்களிலும் இவர்களால் 20 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என ரகானே நினைத்துள்ளார்.

SCROLL FOR NEXT