இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 டி20 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என தொடரை கைப்பற்றியது.
முதல் 3 டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 4வது டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5-வது டி20 போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார் இணைந்துள்ளனர்.
அதன்படி, இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது.